வீட்டின் வாசலில் கறுப்பு நிறத்தில் எறும்புகள் சாரை சாரையாக சென்றுகொண்டிருந்தன. இனியன் அதைப் பார்த்து அப்பா எறும்பு அதன் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு செல்கின்றன என்றான். நானும் அதைப் பார்த்தேன். வெள்ளை நிறத்தில் ஒன்றினை வாயில் கவ்விக்கொண்டு சென்றன. அது எதை எடுத்தச்செல்கின்றன என்பதை பார்ப்பதற்காக மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்தோம். அப்போதுதான் தெரிந்தது அவைகள் எறும்பின் முட்டைகள் என்று. அதனை வீடியோவாகவும், நிழல் படமாகவும் பதிவு செய்தோம்.