கூடு கட்டியிருந்த எறும்பின் கூடு காய்ந்து போயிருந்தது. நான் அதனை எட்டிப்பார்த்த போது புதிய இளம் எறும்புகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. ஆனாலும் மரத்தின் இலையில் இருந்த ஒரு குச்சியில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்தது. அதனை விட்டு மற்ற எறும்புகள் செல்லவே இல்லை. அதனை எடுத்து மடிப்பு நுண்ணொக்கியில் வைத்துப் பார்க்கலாம் என்று எடுத்த வைத்துப் பார்த்த போது அது எறும்பு வளருவதற்கான பாதுகாப்பாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது சுருட்டை முடி போன்று வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.