ஜீலை 29ம் தேதி கம்பத்தில் ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி குறித்த விளக்கம் அளிக்கவும், அதனை பயன்படுத்துவது குறித்தும் பேசுவதற்கும் பயிற்சி வழங்கவும் சென்றிருந்தேன். நான் பயிற்சி முடிக்கும் போது ஒரு போன் வந்தது. அதிலிருந்து பெருஞ்சித்திரன் ஆசிரியர் பேசினார். அவர் மடிப்பு நுண்ணோக்கியை ஆன்லைனில் வாங்கி விட்டதாகவும் அதனை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வீடு தேனி என்பதாலும் அது நான் திரும்பும் வழியில் உள்ளதாலும் சரி என்று சொல்லிவிட்டேன். அவருக்கு அவரது வீட்டிலேயே சென்று பயிற்சி அளித்தேன். மகிழ்ந்து போனார். மேலும் என்னுடைன் அண்ணா நூற்றாண்டு நூலகம் வந்து மேலும் சிறப்பாக கையாளுவதற்கு கற்றுக்கொண்டார். இது போன்ற ஆசிரிர்கள் ஆங்காங்கே காண்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.