நேற்று மாலை Foldscope உறு்ப்பினர்கள் பள்ளிக்கு வந்தார்கள். சார் புங்கை மர இலையில் இது போன்ற பாதிப்பு இருக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்றனர். சரி என்று ஸ்கோப்பை எடுத்து உள்ளே அந்த இலை பாதிக்கப்பட்ட பகுதியையும் பாதிப்பு இல்லாத பகுதியையும் பார்த்தோம். உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு பூச்சி பச்சையத்தை தின்றுகொண்டிருந்ததது. அது தின்று முடித்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. மேலும் அப்பூச்சி தின்ற இத்தில் வெளிச்சம் ஊடுருவிச் சென்றதையும் பார்க்க முடிந்தது. இலைக ள் தண்ணீரை கடத்தியிருப்பதையும் பார்க்க முடிந்தது. தண்ணீர் பூச்சி சிதைத்த பகுதியின் முனையில் திறன்டு இருந்த இடத்தையும், அதன் வழியே வெளிசசம் ஊடுருவும் போது நிறப்பிரிகை நடந்ததையும் பார்க்க முடிந்தது. அற்புதமான பதிவாக இருந்தது. அந்த பூச்சியின் பெயர் என்ன என்று என்னிடம் கேட்டனர் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள். இந்த பதிவை விஷால், நரேஷ், பரத், அனுஷியா, முதின்ஸ், இனியன் ஆகியோர் செய்தனர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!