வீட்டில் சொலகு இருந்தது. அதனை கொண்டு கோதுமை புடைப்பதற்கு எடுத்த போது அதில் எறும்பு குஞ்சுகள் இருந்தன. அவற்றை தட்டுவதற்கு பார்த்த போது உள்ளிருந்து வெள்ளை வெள்ளையாக கீழே உதிர்ந்தது. நான் எறும்புகள் கோதுமையை சாப்பிட்டுவிட்டு துகள்களா போடுகிறது என்று நினைத்தேன். மேலும் சில எறும்புகள் வேக வேகமாக அந்த வெள்ளை துண்டை எடுத்துக் கொண்டு ஓடின. அதனால் அது எறும்பின் உணவு துண்டுதான் என்று நினைத்தேன். அந்த கோதுமை துண்டின் பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்று அதனை எடுத்துப் பார்த்தேன். அது கோதுமை துண்டு இல்லை. அது சிவப்பு எறும்பின் முட்டைகள். இந்த முட்டைகள் பல வகையில் வளரந்து இருந்ததை பார்க்க முடிந்தது.இளம் குஞ்சுகள் வேக வேகமாக வெள்ளை நிறத்தில் ஓடின. சில முட்டைகளின் வளர்ச்சியின் உள்பகுதி இயக்கத்தையும் நம்மால் பார்க்க முடிந்தது.