நண்பர்களோடு பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றிப்பார்க்கச் சென்றோம். அங்கே பூங்காவில் அற்புதமான பூக்கள் பூத்திருந்தன. அந்த பூக்களின் மகரந்தங்களை பதிவு செய்ய மடிப்பு நுண்ணோக்கியை எடுத்தேன் என்னைச் சுற்றி மக்கள் கூட ஆரம்பித்தார்கள். அவர்களிடம் மடிப்பு நுண்ணோக்கியை காண்பித்தேன். அங்கே இருந்த செக்குரிட்டி வேகமாக வந்து எங்களை வெளியே அனுப்பிவிட்டார். நான் வெளியே வந்த பின் அவரிடமும் அதைக் காட்டினேன். மகிழந்து போனார். நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டோம் சார். காவல் பலமாக இருக்கும் இடத்தில் மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தும் போது இது போன்ற சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உற்சாகம் குறையவில்லை.