ஞாயிறு அன்று விடுமுறை. ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றம் செல்லலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் எனக்கு வேறு வேலை இருந்ததால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. அதனால் மாலை போகலாம் என்று முடிவெடுத்தோம். தேர்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதால் படிப்பிற்கு ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள இந்த மடிப்பு நுண்ணோக்கி பதிவு உதவும் என்றனர். நானும் இனியனும் தண்ணீர் மாதிரியை எடுத்து வந்தோம். பள்ளியில் வந்த மாதிரிகளை பதிவு செய்தோம். நேரம் கடந்ததே தெரியாமல் போயிற்று. நிறைய நுண்ணுயிரிகளை கண்டறிந்தனர்.