கடந்த 26 ஆம் தேதி குடியரசு தின விழாவின் போது என் நண்பர்களை 29 ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய முகநூலில் சில நண்பர்கள் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் மடிப்பு நுண்ணோக்கியின் என் பதிவினைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அதற்கான பயிற்சியை கேட்டிருந்தனர். என்னிடம் ஒன்று இரண்டு மடிப்பு நுண்ணோக்கி மட்டுமே இருந்தது. அதனைக் கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். மிகவும் மகிழ்ந்து போனார்கள். எனக்கு அவர்கள் அனைவருக்கும் கொடுக்க முடியாமல் போனது வருத்தத்தை அளித்தது. இருந்தாலும் சுமார் 30 ஆண்டுகள் கழித்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கை இன்ப துன்பங்களின் பகிர்வு உணர்வுபூர்வமாக இருந்தது.