இது மணிகண்டனின் பதிவு. அவன் ஞாயிறு அன்று ஒரு கொசுவினைப்பிடித்து FoldScopeல் வைத்து அங்குலம் அங்குலமாக பார்த்து அதிசயத்துப் போனான். அவன் பள்ளியில் மைக்ராஸ்கோப்பை தூரத்தில் நின்று காட்டியதோடு சரியாம். அப்படியே போனாலும் தொடாமல் அவர்கள் உள்ளே வைத்திருக்கும் சிலேடை மட்டும் பார்க்க அனுமதியாம். ஆனால் இப்போது கையிலேயே மைக்ராஸ்கோப். அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்போதும் ஸ்கோப்போடுதான் இருக்கிறான். கொசுவின் இறக்கை, முகம், கண்கள், மற்றும் உருஞ்சு குழாய் பார்த்துவிட்டு மிகவும் வியந்து போனான். கொசுவிற்கு இத்தனை கண்களா?