இன்றைக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அம்மா ஆரஞ்சு பழம் கொடுத்தாங்க. நான் அதன் தோலின் சிறு பகுதியை பிளேடால் வெட்டி எடுத்து FoldScopeல் வைத்துப் பார்த்தேன் முதலில் அது சிலந்தி வலை போல தெரிந்தது. இன்னும் கூர்ந்து பார்த்தேன் மஞ்சளும் வெள்ளையும் கலந்த பாலாடை போல தெரிந்தது. பின்பு ஒரு யோசனை வந்தது. உள்ளே உள்ள சுளையில் ஒரே ஒரு பகுதியை எடுத்து அதற்குள் சூஸ்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் என்று தோன்றியது. அதன் படி ஒரே ஒரு சிறு துண்டை எடுத்து FoldScopeல் வைத்துப் பார்த்தேன். ஆகா அருமையாக தெரிந்தது. வெள்ளை நிறத்தில் பனி துளிகள் போல தெரிந்தது. மேலும் மேசையின் மீது கொட்டிய தண்ணீர் போல திரள் திரளாக சூஸி இருந்ததை பார்த்து ரசித்தேன்.
P. Muthins 7th Std