புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புத்தகத்திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்க மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர். புத்தக கண்காட்சியில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி ஒரு புதிய அனுவத்தைக் கொடுத்தது. அவர்கள்மட்டுமல்லாது பல்வேறு பொது மக்களும் கண்டு களித்தனர்.