பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் எடுப்பதற்காக கிடோனுக்குச் சென்றோம். அங்கே பல்வேறு பள்ளிகளிலிருந்து பள்ளி வாகனங்களிலும் ஆட்டோக்களிலிருந்தும் வந்திருந்தனர். என் தோல் பையில் எப்போம் ஒரு பாக்ஸ் மடிப்பு நுண்ணோக்கி இருக்கும். புத்தகம் எடுக்க நேரம் ஆகும் என்று சொன்னதால் நான் அங்கே இருந்தவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம படுத்தலாம் என்று அழைத்தேன் யாரும் ஆர்வம் காட்டடவில்லை. ஆனால் ஆட்டோ டிரைவர் மிகவும் விரும்பி அருகில் வந்தார் அவருக்கு அங்கே ஊரிக்கொண்டிருந்த எறும்பு ஒன்று வைத்து காட்டினேன். அது உணவு உண்பதை அவரால் பார்க்க முடிந்தது. அதிசயத்துப் போனார். இப்படியான ஒன்று நான் படிக்கும் போது இருந்திருந்தால் படம் வரைவதற்கு பதிலாக படம் எடுத்து ஒட்டியிருப்பேன். ஒழுங்கா பள்ளிக்கூடம் போயிருப்பேன் என்றார். உண்மைதானே அவர்கள் காலத்தில் படம் வரையச் சொல்லியே வெளியேறிய மாணவர்கள் அதிகம். அவர்கள் பார்க்காத ஒன்றை பாடபுத்தகத்தை பார்த்து வரையச் சொன்னால். அவருடைய மகிழ்ச்சியை மறக்க முடியாது.