ராஜ்காட்ல் உள்ள நாராயண கோவில் மிகவும் பிரதிஸ்டம் பெற்ற இடம். 13ம் தேதி மாலை அங்கே எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கோவிலை பார்ப்பதற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது. நாங்கள் கோவிலை சுற்றிப்பார்த்தோம். பார்த்து முடித்து அங்கே ஓய்வாக இஅமர்ந்தோம். அப்போ அங்கே எங்களோடு வந்திருந்த ஒருவர் நிகழ்ச்சியின் போது மடிப்பு நுண்ணோக்கியை பார்க்க வில்லை தனக்கு காட்டும் படி கேட்டுக்கொண்டார். நான்அவருக்கு காட்டுவதற்கு எடுத்து காட்டினேன். கோவிலுக்கு வந்த பக்தர்களும் அவரோடு இணைந்து கொண்டனர். கோவிலுக்குள் ஒரு அறிவியல் விழிப்புணர்வு. மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.