தமிழக அரசு மற்றும் அஸ்ட்ரானமி சைன்ஸ் சொசைட்டியுடன் இணைந்து ஈடன் சைன்ஸ் கிளப் மாதிரிப் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வளங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். தாவரவியல் ஆசிரியர்களும், விலங்கியல் ஆசிரியர்களும் மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி அவர்கள் பார்த்த பல்வேறு நுண்ணுயிர்சார்ந்த விஷயங்களை மைக்கோரோ காஸ்மாஸ் தளத்தில் பலரும் பதிவு செய்துள்ளனர். மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியோடு பயோ வாக், மலரும் மகரந்தமும், பரிணாம வளர்ச்சி, மைக்ராஸ்கோப்பின் வரலாறு, தொழிநுட்பத்தை குழந்தைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தி வகுப்புகள் நடத்துவது போன்ற தலைப்புகளில் உரையாடியும் இறுதியாக மடிப்பு நுண்ணோக்கி கொண்டு அவர்கள் கற்றதை வெளிப்படுத்துவதற்கான ஒரு காங்கிரஸ் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. படங்கள் பயிற்சியில் எடுக்கப்பட்ட படங்கள் இதில் 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.