பொதுவாக காடுகளில் காலை நேரங்களில் பூக்கும் பூ இது.
இதன் மகரந்தம் தாளுக்கு அடியில் காணப்படும். அதனை Fold scope-ல் பதிவு செய்தேன். அது பந்து போல காணப்பட்டது.
இதனை என்னுடைய டியூட்டரில் பதிவிட்டேன். Fold scope team எனக்கு மற்றொரு செயல்பாட்டிற்கு வழிகாட்டியது.
மகரந்ததூளை சர்க்கரை கரைசலில் ஊர வைத்து அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்க சொல்லியது. நான் அதனை சர்க்கரை கரைசலில் வைத்து உடனே பார்த்தேன். அதில் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் சுற்றி மஞ்சள் நிறம் காணப்பட்டது.
பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அதனை பார்த்த போது. மிகச் சிறப்பாக இருந்தது.
நீங்களும் முயற்சிக்கலாம்.