திருநகர் 3வது நிறுத்தத்தில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அருகில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது. அதன் அருகே ஒரு அரச மரம் இருந்தது. அந்த மரத்தில் புதிய இலைகள் பச்சை பசேலென்றிருந்தது. இரவில் மரங்கள் தூங்குன்றன என நிறுபிக்க இதன் இலைத்துளைகளை பார்த்தால் தெரியும் என்று தோன்றியது. உடனே அதிலிருந்து ஒரு இலையை எடுத்து பார்தேன். முன்பகுதி, மற்றும் பின் பகுதியில் இலையின் படிவத்தை எடுத்தேன். முன்பகுதியில் எடுத்தபோது அதன் தாவர செல்லும், பின்பகுதியில் எடுத்த போது அதன் இலைத்துளைகளும் காணப்பட்டன. இலைத்துளைகளின் கண்கள் மூடப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. சில துளைகள் திறந்தும் இருந்தன.
தொடரந்து இதனை ஆய்வு செய்தால் ஒரு மரம் எந்த நேரத்தில் தூங்க ஆரம்பிக்கிறது என்பதை அறிய முயற்சிக்கலாம்.
முன்பகுதிபின்பகுதிதாவரசெல் வடிவம்இலையின் உள்வடிவம்இலைத்துளைகள். கண்கள் மூடிய நிலையில் நீங்கள் பார்க்க முடியும்.