சின்னதாக ஒரு பரிசோதனை செய்யலாம்
ஒரு தாவரத்தின் பாகங்களை மடிப்பு நுண்ணோக்கி வழியே கண்டறிதல். அதன் வழியாக பாகங்களின் உள் வடிவமைப்பை அறிந்துந்து கொள்ளுதல்
1. மேலே காணப்படும் பூவின் பெயர் கரிசலாங்கண்ணி (உள்ளுர் பெயர் பெரிய கரப்பான் ). மஞ்சள் வண்ணத்தில் 13 இதழிகளை கொண்டுள்ளது. அதன் மையப்பகுதி வட்டமாகவும் அதற்குள் ஒரு மலர் போன்ற மகரந்தம் பைகளும் காணப்படுகின்றன.
2. இதன் மகரந்தம் மஞ்சள் வண்ணத்தில் இருந்தது. நீள்வட்டத்தித்தில் முற்கள் தாங்கி இருந்தது.
3. இதழ்களை மூன்று வழிகளில் மடிப்பு நுண்ணோக்கிகுள் வைத்து பார்த்தோம்.
முதலில் இதழை அப்படியே உள்ளே வைத்துப் பார்த்து பதிவு செய்தோம்.
இரண்டாவதாக மெதுவாக அதனை இரண்டாக கிழித்து பார்த்தோம். அப்போது வேறு மாதிரி தெரிந்தது.
மூன்றாவதாக மிக மெள்ளியதாக கிழித்து அதனைப் பார்த்தோம். அதனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அது முத்துக்களை அடுக்கி வைத்தது போல இருந்தன. இடைவிடாது ஒழுங்கற்ற முறையில் அடுக்ப்பட்ட வட்டங்கள் போல காணப்பட்டன.
4. மகரந்த தூள்களை தாங்கிருந்த தண்டுகளை பார்த்தோம். அது சுணைகள் போண்டு நீண்டு தண்டுகள் போல மஞ்சள் வண்ணத்தில் காணப்பட்டது. அதன் மீது மகரந்த தூள்கள் காணப்பட்டன.
5. இலைகளின் பாகங்களையும் பார்த்தோம் அவற்றில்
6. தாவரத்தின் தண்டின் குறுக்கு வெட்டு தோற்றத்தையும் காண இயலும். ஆனால் இந்த பரிசோதனையில் செய்ய இயலவில்லை அடுத்த பரிசோதனையில் பதிவு செய்வோம்.
இவை தவிற வேறு என்னவெல்லாம் பார்க்கலாம் என்பதை தாங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் மேலும் அறிந்து கொள்ள உதவும்