வெங்காயம்,வெள்ளைப்பூண்டின் மேல் கருப்பு நிறத்தில் பொடி பூசியது போல் இருக்கும். காய்ந்த மேல் தோலுக்கும் ஈரமான இரண்டாவது அடுக்குக்கும் இடையில் இந்த கறுப்பு நிறம் பூசியது போல் காணப்படும். இது ஒருவகை பூஞ்சை ஆகும். இதை உரிக்கும் போது கறுப்புப் பூஞ்சை கையில் ஒட்டிக் கொள்ளும். இந்தப் பூஞ்சையின் உயிரியல் பெயர் Aspergillus niger.
இந்தப் பூஞ்சை வெங்காயம் இரண்டு மூன்று நாள் காயாமல் ஈரமாக இருந்தால் மண்ணில் இருக்கும் இந்தப் பூஞ்சை தொற்றிக் கொள்ளும். இந்தப் பூஞ்சை மிகவும் பலவீனமானது. வெங்காயம்,பூடு காய்கறிகளில் சிறு சிறு கீறல் வெட்டு இருந்தால் மட்டுமே தொற்றிக் கொள்ளும்.
இது மிகவும் ஆபாத்தானது இல்லை.இருப்பினும் அலெர்ஜி உள்ளவர்களுக்கு சிறு பாதிப்புகளை உண்டு பண்ணும். எரிச்சல் உருவாக்கலாம். நீண்ட நாட்கள் இந்த கறுப்புப் பூஞ்சை இருப்பின் ஒரு வகைப் பாக்டீரியா வளர்ந்து பிற நோய்களை உருவாக்கலாம்.
வெங்காயம், பூண்டு வாங்கும் போது கறுப்பு நிறமாக இருந்தார் தவிர்த்து விடலாம். ஈரமானவற்றை வாங்குவதைத் தவிர்க்கவும். நல்ல காய்ந்த வெங்காயம் பூண்டுகளைவாங்கவும்.
மேலும் தொடர்பு கொள்ளவும்