இது இன்று 12.05.2023 காலை 10.30 மணி
பள்ளியின் முன்புற தோடத்திலிருந்து எடுக்கப்பட்ட மணதக்காளி கீரையின் பாகங்களை மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தது.
8,9,10ம் வகுப்பு மாணவர்களால் செயல்படுத்தக் கூடிய செயல்திட்டத்தை செய்து பார்க்கும் முயற்சி. இதன் அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான முன் மொழிவு. இதில் திருத்தம் தேவையெனில் தங்களது கருத்துக்களை முன்வை்கலாம்
நோக்கம்
தாவரங்களின் பாகங்களை கண்டறிதல், உற்று நோக்கல், அதன் பாங்களை குறித்த தகவல்களை சேகரித்தல் அதன் அடிப்படையில் மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தி உட்பகுதிகளை பார்த்தல், பதிவு செய்தல், படம் வரைதல்
செய்முறை
நாம் தகவல சேகரிக்க இருக்கும் தாவரத்தினை தேர்ந்தெடு்த்தல் தகவல் திறட்டுதல் மற்றும் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தல்
தாவரத்தின் பெயர் மணதக்காளி கீரை(Solanum americanum)
இலை.
தாவரம் பச்சை நிறத்தில் உள்ளது. இலைகளும் பச்சை நிறத்தில் உள்ளன. அதன் நரம்புகள் மேலிருந்து பார்க்கும் போது உட்புறமாக அழுத்தியிருந்தன.இலைகளின் ஓரங்கள் வழு வழு என்றிருந்தன. தொட்டுப் பார்த்த போது அதன் எபிடெர்மல்ஹேர் தட்டுப்படவில்லை. இலையின் கீழ்பகுதியில் நரம்புகள் வெளிப்புறமாக துருத்திக்கொண்டிருந்தன.இலையின் வடிவம் கூம்பு வடிவில் இருந்தது.
இலையின் உட்பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கும் போது பாசிகள் போன்று சிறு சிறு துளைகள் காணப்பட்டன. நரம்புகளின் பாதைகளும் காணப்பட்டன.
அதன் ஓரங்களில் எபிடெர்மல் ஹேர் காணப்பட்டது. அது முடிச்சு போன்று இருந்ததை மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் பதிவு செய்தோம்.
இலையின் இரண்டு பகுதியில் பெவிக்கோல் பசை தடவி காயவைத்தபின் அதனை எடுத்த மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது மேல் பகுதியில் இலைதுளைகள் இலையின் செல் அமைப்போடு தெளிவாக தெரிந்தது. அடிப்பகுதியில் செல் அமைப்பு மட்டுமே தெரிந்தன. இலைதுளைகளை பார்க்க முடியவில்லை.
அடிப்பகுதி இலை செல் அமைப்பு
பூ
5 வெள்ளை நிற இதழ்களுடன் மிகச் சிறிய பூ வாக இருந்தது. பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்திருந்தன. மகரந்த பைகள் இணைந்து மஞ்சள் நிறத்தில் பூசணி போன்று துருத்திக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. இதழ்களையும், மகரந்தத்தையும் தனித்தனியாக மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்து பதிவு செய்யப்பட்டது.
பூவின் இதலை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது
இதழை இரண்டாக கிழித்து பார்த்த போது அதன் வடிவம்
மகரந்த பை மற்றம் இதன் மகரந்தம்
மகரந்த பையின் உள் அமைப்பு
தண்டின் குறுக்கு வெட்டு தோன்றம்.
இப்படியான பதிவுகளை செய்ய ஒரு செயல் திட்டம் முன்வைக்கப்படடுகிறது. இதில் ஏதேனும் சேர்க்கை நீக்கம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.