சென்னையில் உள்ள கணிதவியல் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகையில் ஒரு பகுதி மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கேசவர்த்தினி என்ற மூலிகை இருக்கிறது. இதன் மலர் நீல வண்ணத்தில் வட்டமாக சிறு சிறு குச்சிப் போன்ற இதழ்களை கொண்டிருந்தது. அதன் மகரந்ததைபார்ப்பதற்காக அதனை பிரித்துப் பார்த்தேன். மகரந்தம் இருக்கும் இடம் தெரியவில்லை. பூவின் அடிப்பகுதியில் செலோ டேப்பால் ஒட்டி எடுத்து அதனை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தேன். வழக்காமக பூக்களில் காணப்படும் பூச்சிதான் அது. ஆனால் இது நீண்டு காணப்பட்டது. இதன் பின் பகுதியில் இறகு போன்ற ஒன்று வெளிவே தெரிந்தது. அது நீள் வட்டத்தில் சுற்றி முடிகள் காணப்பட்டன. நான் அதனை அதன் இறகு என்று நினைத்தேன். ஆனால் அங்கிருந்த ஒரு விஞ்ஞானி அது அதனுடைய பால் உறுப்பாக இருக்கலாம் என்று சொன்னார். உண்மையில் தெரியவில்லை. பூச்சிகளின் நிபுணர்கள் கண்டறிந்து சொல்லலாம்.