ஒரு நாள் நான் மாவாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது மடி பகுதியில் ஒரு தேனீ இறந்து கிடந்தது. மாவாட்டும் நேரம் பிடிக்கும் என்பதால் அதுவரை நேரம் செலவு செய்ய நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதனை நான் பயன்படுத்திக் கொண்டேன்
தேனீயின் இறகுகளை. முதலில் பார்த்தேன். இரண்டு இறகுகள் இருந்தன. ஒன்று சிறியது மற்றொன்று பெரியது. சிறிய இறகில் அதன் முடிகள் சின்ன தாக இருந்தன. பெயரி இறகில் பெரிய முடிகளாக இருந்ததை பார்க்க முடிந்தது. நம் கைகளில் காணப்படும் முடிகள் போல காணப்பட்டன.
தேனீ இறந்து கிடந்தது. எறும்புகளை அதனை எடுத்துச் செல்ல முயற்சித்தது.
இரண்டு இறகுகள்.
சின்ன இறகின் மேல் பகுதி. இதில் அதன் முடிகளை பார்க்கலாம். அதன் அமைப்பில் சிறிய முடிகளாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது இல்லையா.
இது பெரிய இறகு. இதன் மேல் பகுதி முடிகள் பெரியதாக இருப்பதை பார்க்கலாம். இதன் மீது கிளிசரின் இட்டு பார்த்தோமானால் இன்னும் தெளிவாக ஒவ்வொரு பகுதியையும் பார்க்க முடியும் என தோன்றுகிறது.
இவை இரண்டும் பின்னங் கால்கள். இதன் முனைப்பகுதி இரண்டு பகுதிகளாகவும் முடிகள் முட்கள் போன்றும் காணப்படுகின்றன. அதன் கால் நடுப்பகுதியில் மகரந்த தூள் இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
இவை இரண்டும் கண்களைச் சுற்றி முடிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த முடி மிருதுவாக இருப்பதை நாம் காணலாம். மேலும் அவை நெற் கதிர் போன்று கிளைகளாக பிரிந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. முன்னங்களிலும் அது போன்ற மிருதுவான முடிகள் காணப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆனால் பின்னங்கால்கள் போல முற்கள் போன்று முடிகள் இல்லை. ஒரு வேளை தெரியவில்லை
வாய்பகுதியில் உள்ளது. இதன் மூலம் நுகர்வு கொள்ளுமா அல்லது தேன் உருஞ்சுமா என்று தெரியவில்லை.
தேனீகள் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை என்று சொல்லுவது உண்டு. ஏனெனில் தாவரங்களுக்கு இடையே மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் பூச்சிகளில் ஒன்று தேனீ. தேனீயின் உடல் முழுவதும் மகரந்தங்கள் ஒட்டியருப்பதை பார்க்க முடிந்தது. மேலே உள்ள படம் தலையில் இருந்து எடுக்கப்பட்ட மகரந்த தூள்கள். இவை மட்டுமல்ல தேனீக்களின் கால்களுக்கு இடையேயும் இருப்பதை நாம் பார்க்கலாம்.
இவை தலை முடிகள். இவை கோதுமை தாவரம் போல காணப்படுகிறது.