சென்னை கணிதவியல் நிறுவனத்தில் உள்ள விடுதியில் மூலிகைகள் பதியமிட்டு வளர்த்து வருகின்றனர். நான் இரண்டு நாள் அங்கே தங்கியிருந்தபோது, இரண்டு பூக்களின் மகரந்தத்தை பதிவு செய்ய முடிந்தது. 1. சிரியாநங்கை, 2. திருநீற்றுப்பச்சிலை. இதன் மருத்துவ குணத்தையும் அங்கேயே பதிவிட்ட பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கை நமக்கு பல அதிசயங்களை உள்ளடக்கி கொண்டுள்ளது. நாம் காண காண ஆச்சரியம்தான்.