பள்ளியின் முன்பக்கம் ஒரு அரளிப்பூச் செடி உள்ளது. அதன் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பூச்சி தாக்கியிருந்ததை பார்த்த எம் மாணவர்கள் அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்க்கலாம் என்றனர். அதன் அடிப்படையில் அதனை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்த்தபோது அதன் கால்கள் பூச்சிகளுக்கு உள்ள தன்மையில் இருந்தது. அதன் கால்கள் முழுவதும் முற்கள் போன்று காணப்பட்டது. அதன் வயிற்றுப் பகுதியில் முட்டை போன்ற பகுதிகள் துடித்துக் கொண்டிருந்தன. அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது.