இது சென்னையில் நடைபெற்ற சுவாமிநாதன் பவுண்டேசன் பயிற்சி முகாமின் போது பதிவு செய்தது. தண்ணீரி்ல் பல்வேறு உயிரினங்கள் இருந்தன. அவற்றினை பார்த்துக் கொண்டும் பதிவு செய்து கொண்டும் வந்தோம். ஓரிடத்தில் ஒரு அழுக்குப் போன்ற பகுதி அசையாமல் இருந்தது. அதனை கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் பார்த்த போது அது தன் உடலுக்குள் உள்ள சிறு சிறு துகள்களை சுற்றிக்கொண்டும் தானும் நகன்று கொண்டும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்துவிட்டோம். அற்புதமான பதிவு இது. இது குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பதிவிடலாம். இவை என்ன என்பதை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.