பள்ளியின் பின்பக்கம் ஒரு கருவேப்பிலை செடி ஒன்று வளர்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்து வருகின்றனர். ஒரு நாள் தாளமுத்து கருவேப்பிலையில் ஒரு வெள்ளை நிற பூச்சி தாக்கியிருப்பதாக கூறினான். நானும் சென்று பார்த்தேன். அது மாலைவேளை என்பதால் முழுமையாக அதனை பார்க்க முடியவில்லை. மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்ததும் மடிப்பு நுண்ணோக்கியை எடுத்து பார்க்க ஆரம்பித்திருந்தான். நானும் அவனுடன் வந்து சேர்ந்து கொண்டேன். வெள்ளை நிறத்தில் ஒன்றும், கறுப்பு நிறத்தில் ஒன்றும் இருந்ததை பார்க்க முடிந்தது. அவற்றை பதிவு செய்தோம். கறுப்பு நிறத்தில் இருப்பது என்ன என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் வெளிச்சம் புகுந்து வருவதை பார்க்க முடிந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பூச்சி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது.