இன்று பொங்கல் விடுமுறை. நான் வீட்டில் இருந்தேன். இனியன் Foldscope உடன் ஓடிவந்தான். என்னிடம் காட்டினான். நான் உள்ளே பார்த்தேன். மேலே தெரிகிற படம் தெரிந்தது.
என்னது என்று கேட்டேன். சின்ன வெங்காய தோல் சார். ஆஹா அற்புதம் என்றேன். ஆமாம் சார் சூப்பரா இருந்தது சார். எனக்குதான் ஒரு கேள்வி வந்தது சார் என்றான். என்ன கேள்வி
இல்லை வெங்காயத்தை உரித்து பார்க்கும் போது அது மேலிருந்து கீழாக கோடு கோடாகதானே தெரியும். அனால் இது எப்படி வலை பின்னல் போல தெரியுது? என்று கேட்டான். எனக்கு பதில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள். நானும் விடையை தேடுகிறேன்.
இப்படி என்னை போன்ற ஆசிரியர்களை இயக்கிகொண்டிருக்கிறது Foldscope.