மகரந்த தாழ்
இன்றைக்கு முதின்ஸ் பதிவு செய்தது. மேலக்கால் கிராமத்தில் குப்பையில் காய்த்து தொங்கிய அவரைக்காய் போன்ற ஒரு கொடி. பூ அவரை பூ போன்றே இருந்தது. காயும் அவரை காய் போன்றே பெரிதாக இருந்தது. இதற்கு கிராமத்தில் ”தம்மட்ட அவரை” என்கிறார்கள். இதன் பூ, காய், மகரந்தம் மற்றும் பூ இதழின் ஒரு சிறு பகுதியையும் இங்கே பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் குழந்தைகளுக்க உற்சாகம் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த செயல்பாட்டில் குழந்தைகள் மூழ்கி போகிறார்கள். தேடுவதே ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டதாக கூறுகின்றனர்.
மகரந்தம் மற்றும் மலர் இதழின் சிறு பகுதி Foldscope ல் பதிவு செய்தவை.
பூ
பூ இதழின் சிறுபகுதி
காய்