நான் Foldscopeல் மாணவர்கள் பதிவு செய்வதை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக என்னுடைய முக நூலிலும் பதிவு செய்வேன். என்னுடைய நண்பருடைய தோழி இந்து அவர்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் M.Pharm படித்துவருகிறார். அவரிடம் நிரந்தர சிலேடு எப்படி தயார் செய்வது என்பதை கற்றுக் கொள்வதற்காக அனுகினேன்( மாணவர்களுக்க உபயோகமாக இருக்கும் என்பதற்காக). அவரும் தன்னுடைய கல்லூரிக்கு அழைப்பு விடுத்தார். நானும் சென்றேன். என்னுடன் Foldscopeஐயும் எடுத்துச் சென்றேன். துறைத்தலைவரை சந்தித்தேன். அவரிடம் இதை விளக்கினேன் ஆச்சரியப்பட்டுப்போனார். உடனே சில சிலைடுகளை எடுத்த உள்ளே வைத்து பார்த்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. Foldscope கல்லூரி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார். அங்கே பதிவு செய்த சில சிலைடுகள் இங்கே கொடுத்துள்ளேன்.
Dr.K. Periyanayagam, M.Pharm, Phd
Professor & Head
Department of Pharmacology
College of Pharmacy
Madurai Medical College
Madurai. 625 003.
mail id. drkpn1960@gmail.com
mobil. 91-9443772991