தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இரண்டு நாள் கோவை KPR Institute of Engineering and Technologyல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற Science Fest – 2016. நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக என்னை அழைத்திருந்தனர். நான் கணித பயிற்சி வழங்கும் கருத்தாளர். கணித பயிற்சி பொருட்களுடன் FoldScopeஐயும் எடுத்துச் சென்றேன். அங்கே வந்திருந்த அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். வரிசையில் நின்று FoldScopeஐ பார்த்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட துளிர் இல்ல குழந்தைகளும் (Thulir Science Club) பார்த்தனர். அதில் பதிவு செய்ததுதான் இந்த காகித பூ இதழ். உண்மையில் நீண்ட நேரம் குழந்தைகள் நின்று பார்த்ததால் முழுமையாக அவற்றை என்னால் விளக்க முடியவில்லை. மேலும் எல்லோருக்கும் சிலேடு செய்தவற்கும் அதை பயப்படுத்துவதற்கம் வாய்ப்பு வழங்க முடியவில்லை. இருந்தாலும் குழந்தைகளின் உற்சாகத்தை வர்ணிக்க முடியவில்லை. அனைத்து கிராமத்துக் குழந்தைகளுக்கும் இந்தமைக்ரோஸ்கோப் இருந்தால் உண்மையிலேயே குழந்தைகளுக்கு அறிவியலின் மீது ஆர்வத்தை மிகைப்படுத்தும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.