தேசிய அறிவியல் தினப் பயணத்தில் 4ம் நாளாக இப்பள்ளியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்டதுவக்கப்பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனை ஒட்டிஅரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. ஏற்பாடு செய்தது துவக்கப்பள்ளியில் தான். மாணவர்கள் உற்சாகமாக கண்காட்சியை பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொள்ள இடைவேளையில் வெளியில் வந்த சில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வந்து பார்த்துச் சென்றனர். அவர்கள் பார்த்ததை சக மாணவர்களுக்குச் சொல்ல அனைத்து மாணவர்களும் கண்காட்சியை காண வந்துவிட்டனர். உடனே அவர்களுடன் அவர்களுடைய அறிவியல் ஆசிரியரும் வந்து என்ன என்று எட்டிப் பார்த்தார். மடிப்பு நுண்ணோக்கியைப் பார்த்ததும் அதிசயத்துப்போனார்கள். உடனே அப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் வந்து கண்காட்சியை பார்த்துச் சென்றார். அவர்களுக்கு லேபில் மைக்ராஸ்கோப் இருந்தாலும் பயன்பாட்டில் இல்லையாம். இது போன்று மைக்கராஸ்கோப் இருந்தால் பெரிதும் உதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் வைத்தனர். நான் சிரித்துக்கொண்டே உரையாடலை முடித்துக் கொண்டேன். வாய்ப்ப ஏற்படும் போது அவர்களுக்கு ஒரு மடிப்பு நுண்ணோக்கி கொடுக்கலாம்.