காலையில் எழுந்ததும் இனியன் ஹாட் பாக்ஸ் ல் இருந்த முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட போனான். ஆனால் அதில் பூஞ்சை வளர்ந்திருந்தது. அவன் அதை சாப்பிட மறந்து இரண்டு நாள் ஆயிற்று. உடனே மடிப்பு நுண்ணோக்கியை எடுத்து வைத்து பார்க்க ஆரம்பித்துவிட்டான். டீ சாப்பிட சொன்னதற்கு இன்றைக்கு டீக்கு விடுமுறை என்றான்.