எறும்பின் கூட்டை பதிவு செய்து கொண்டிருந்தபோதே மற்றொன்றை முதின்ஸ் பார்த்துவிட்டாள். இலையின் நடு பகுதியில் ஒரு சிறிய பூச்சி வலை பிண்ணி இருந்தது. பூச்சியை கண்ணால் பார்க்க முடியவில்லை. முதலில் அந்த வலையைதான் பதிவு செய்ய முயற்சித்தாள் ஆனால் அதற்குள் இருந்த பூச்சியை பார்த்த பின் அதனை பதிவு செய்ய முனைந்துவிட்டாள். அதன் முகம் மற்றும் கால்களை பதிவு செய்தாள்.