வீட்டிற்கு முன்பு மிகச் சிறிய பூச்சி போன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதனை அடையாளம் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் காய் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். முதின்ஸ் இது என்னது அப்பா என்று கேட்டாள். எனக்கு தெரியவில்லை என்றேன். உடனே FoldScopeபை எடுத்து அதில் அந்த சிறு பூச்சியை வைத்து பதிவு செய்துவிட்டாள். நான் காய் வாங்கிகொண்டு வீட்டிற்கு திரும்பியதும். அப்பா அது பேபி ஆண்ட் ப்பா என்றாள்.