முதின்ஸ் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகைப் பூ வங்கி கொண்டு வந்தார்கள். முதின்ஸ் அம்மாவோடு இணைந்து பூ கட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று எழுந்து அம்மா மல்லிகை பூவை Foldscopeல் பார்க்க போகிறேன் என்று சொல்லிவிட்டு பூ கட்டுவதை அப்படியே போட்டு விட்டு எழுந்துவிட்டாள்.
மூடிய பூவை திறந்து உள்ளே இருந்து விதை போன்ற அமைப்பு இரண்டு இருந்ததை எடுத்தாள். அதனை கண்ணாடி சிலேடில் வைத்து மேலே கவர் கிளாஸ் வைத்து பார்த்து பதிவு செய்தாள். பின்னர் அதனை எடுத்து விதை போன்ற அமைப்பையும் பிளந்து சிறு பகுதியாக வெட்டி வைத்து பதிவு செய்தாள். இதில் எது மகரந்தம் என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை. மல்லிகை பூ பூப்பது மட்டும்தான். காய்ப்பது கிடையாது. எனவே அதற்கு மகரந்தம் இருக்காது தானே என்றாள். எனக்கு தெரியவில்லை.