மடிப்பு நுண்ணோக்கி உயிரியியல் நடையில் மாணவர்கள் பல்வேறு மாதிரிகளை சேகரித்து வந்தனர். சிலர் அங்கேயே பதிவும் செய்தனர். குறிப்பாக அபிமணிகண்டன், ஆகாஷ், மற்றொரு ஆகாஷ், வேல்முருகன் ஆகியோர் அங்கேயே மடிப்பு நுண்ணோக்கி கொண்டு மாதிரிகளை பதிவு செய்தனர். சிலர் முயற்சி செய்தனர். சிலர் தாங்கள் மாதிரிகளை சேகரித்துவந்து அதனை பின்னர் வீட்டில் பதிவு செய்வதாக சொல்லி சேகரித்து வந்திருந்தனர். அப்படி பதிவு செய்ய பிடித்து வந்த மாதிரிகளில் ஒன்றுதான் மின்மினிப் பூச்சி. அதன் பல பாகங்களை முதின்ஸ், இனியன், மற்றும் சந்தோஸ் ஆகியோர் பதிவு செய்தனர். அதனை இங்கே பதிவு செய்துள்ளோம். ஆச்சரியமான விஷயமாக இருந்தது. மேல் தோல் தடிமனாக வும் அதற்குள் இறகும் இருந்ததை பார்க்க முடிந்தது. இது கரப்பான்பூச்சி அமைப்பில் இருப்பதாக கூறினர். இப்படியான ஒப்பீடுகள் அப்போதைக்கப்போத நடைபெறும்.