மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் கடற்கரை கிராமம் சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. அங்கு 08.05.2019 அன்று என் நண்பர் அமலராஜனுடன் சென்றேன். கடற்கரை கிராம மக்கள் மடிப்பு நுண்ணோக்கியை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறியும் நோக்கம் இல்லை என்றாலும் அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை காட்டும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் மடிப்பு நுண்ணோக்கியை தொட பயந்தார்கள். எங்களுக்கு எதுக்கு சார் என்று கடந்து போனவர்களே அதிகம். நீங்க உங்க வேலையை பாருங்க சார். நாங்க போரோம் என்று சென்றவர்களே அதிகம். அவர்களுக்கு அவர்கள் கண் முன்னாடியே ஒரு சிலேடை தயாரித்து மடிப்பு நுண்ணோக்கிக்குள் வைத்துக் காட்டினேன். ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். ஆனாலும் அறியாமையிலேயே இன்னும் இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள், அருகில் இருக்கும் நகரை தவிற மற்ற இடங்களுக்கு சென்றதே கிடையாது என்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அறிவியல் சாதனத்தை அறிமுகப்படுத்தியது பெரும் மகிழ்ச்சியே. அற்புதமான உணர்வு அங்கிருந்த நேரங்கள்.