06.05.2019 அன்று மதுரை கருபாயூரணியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்கும் போதுதான் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இந்தியாவில் எளிமையாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.