பள்ளியில் காலையில் போனது ஒரே பரபரப்பு. என்ன என்றால் செம்பருத்தி இலையில் ஒரு வித கருப்பு வண்ணபூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்க வேண்டும் என்று எல்லோறும் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க நாங்கள் அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்க முயற்சி செய்தோம். ம்கும் முடியவில்லை. அதற்கு மாற்றாக மாநகராட்சி குடிநீரில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டனர். உடனே அதனை பாரக்க முடிவு செய்து பார்த்தோம். அதனை பார்த்த அத்தனை பேரும் அச்சரியத்தில் ஆழ்ந்து போயினர். மாநகராட்சி தண்ணீராக இருந்தாலும் காய்ச்சிதான் குடிக்க வேண்டும் என்று நான் சொன்னதும் அதனை ஏற்றக்கொண்டனர். அதுமட்டுமல்ல வீட்டில் சென்று சுடுதண்ணீர் கொடுத்தால் தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பதாக பெற்றொர் புகார். இந்த புகார் மகிழ்ச்சியானது தானே.