சுரேஸ் சிறு வயதிலிருந்தே சமூக வேலைகளில் ஈடுபட்டு வருபவர். சென்னையில் வசித்து வருகிறார். அவர் தமிழக அரசின் சுகாதார துறையுடன் இணைந்து கிராமப்புர மக்களுக்கான சேவையை செய்து வருகிறார். ஒரு நாள் மாலை என்னை அழைத்து அண்ணே நான் உங்களை பார்க்க வருகிறேன் என்றார். வாருங்கள் என்றேன். அவரை சந்தித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை செய்து பார்க்க ஆசைப்பட்டு மடிப்பு நுண்ணோக்கியை கேட்டு வந்தார். நான் பள்ளியில் இருந்த இரண்டு மடிப்பு நுண்ணோக்கியில் ஒன்றை கொடுத்தேன். அதனை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கேட்டு அறிந்த சென்றார். எதிர்காலத்தில் சுகாதார துறையில் பெரும் பயனை இந்த மடிப்பு நுண்ணோக்கி ஏற்படுத்தும் என்று எதிர் பாரக்கிறேன்.