பள்ளியின் முன்பக்கம் இரண்டு புங்கை மரம் இருக்கிறது. இதில் எறும்புகள் கூடு கட்டி வாழ்கின்றன. ஒரு முறை முதின்ஸ் அந்த கூட்டினை பார்த்து எறும்புகள் உருவாக்கும் இலைகளை இணைக்கும் நூல் போன்ற அந்த பகுதியை எடுத்து பதிவு செய்திருந்தார். இன்று நான் பள்ளி முடித்து வந்தபோது அந்த இலை உதிர்ந்து கிடந்தது. அதனை எடுத்த அந்த நூல் போன்ற பகுதியை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்த்தேன். அவை சல்லடை போன்ற அமைப்பில் பின்னப்பட்டிருப்பது அற்புதமாக இருந்தது.