12,13 ஆகிய தேதிகளில் ஆர்பிட் கல்லூரி ராஜ்காட்ல் தங்கியிருந்தோம். அதே வளாகத்தில் குஜராத் வழி மாணவர்களுக்கான பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகப்படுத்திடலாம் என்று கேட்டோம். ஆசிரியர்கள் அதற்கு அனுமதித்தனர். நாங்கள் அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினோம். என்னுடன் பாண்டிச் சேரியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மொழி ஒரு தடையாக இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.