எறும்பின் பல்வேறு பாகங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்துள்ளோம். டாக்டர் சாம் அவர்கள் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட போது சில பொருட்களை கொடுத்துவிட்டுச் சென்றார். அதில் ஒன்று 100 சதம் கொண்ட கிலிசரின். அதனை எப்படி பயன்படுத்தவது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதனை எங்கள் யோசனையில் பயன்படுத்தலாம் என்று யோசித்து எறும்பினை சிலேடில் வைத்து அதன் மீது ஒரு சொட்டு கிலிசரினை விட்டோம். அதன் மீது செலோ டேப் போட்டு அதனை மடிப்பு நுண்ணோக்கிக்குள் வைத்து எடுத்த படம் தான் இது. மிக தெளிவாக பாகங்களை பார்க்க முடிந்தது. அடுத்தடுத்த முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.