இது இனியனின் பதிவு. இனியன் தற்போது 6ம் வகுப்பு படித்து வருகிறான். இன்றைக்கு EDEN SCIENCE CLUB கூட்டம் நடைபெற்றது. இதில் நீண்ட நாட்கள் FOLDSCOPE பதிவு செய்யவில்லை. மேலும் முழு ஆண்டு விடுமுறையில் திட்டமிட்ட மலர்கள் மற்றும் அதன் மகரந்த தாள்களை பதிவு செய்வது விட்டு போய்விட்டது. அதை முடிக்க வேண்டும் என்று பேசினோம். அதை இன்றே தொடங்குவோம் என்று விஷால் சொல்ல இன்று பதிவானதை பதிவு செய்கிறோம். இனியன் கூட்டத்திற்கு வரும் போதே மணலோடு வந்து பதிவு செய்தான். மணல் துகள்கள் வைரம் போல் மின்னுவதை கண்டு ஆச்சரியமடைந்தான்.