இனியனுக்கு மூலிகை குறித்த பாடம். பல்வேறு மூலிகைகளை சேகரித்து பள்ளியில் கொடுக்க வேண்டும். இதற்காக வரும் போதே கீழாநெல்லியை பிடிடுங்கி எடுத்துவந்தான். இலையின் பின் பகுதியில் சிறு சிறு உருண்டையாக நெல்லிக்காய் போன்று இருந்தது. உடனே foldscopஐ எடுத்தான் உள்ளே அந்த நெல்லிக்காய் போன்று உள்ளதை வைத்தான். ஒன்றும் தெரியவில்லை. எ்ன்னை அழைத்து அப்பா இது என்னப்பா ஒன்றும் தெரியவில்லை என்றான். நானும் பார்த்தேன் ஒன்றும தெரியவில்லை. உள்ளே முழுமையாக வைத்ததை எடுத்துவிட்டு பிளேடால் மெலிசாக குறுக்கா வெட்டி உள்ளே வைத்தேன். இப்போது பார்க்கச் சொன்னேன். ஆகாக அற்புதம் என்று வியந்தான். இந்த படங்களை பதிவு செய்தான்.அவை உங்கள் பார்வைக்கு. அவன் இன்னும் நிறைய மூலிகைகளின் உள்பகுதியை பார்க்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளான். கீழாநெல்லி தமிழகபகுதியில் மஞ்சகாமாளைக்கு மருந்தாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.