திரையிடல் முறையில் பதிவு செய்வதை பரிசோதனை செய்து பார்த்தோம். லக்ஸ் மற்றும் மேக்ஸ் கொடுத்த வழிமுறைகளை பயன்படுத்தி பதிவு செய்தோம். அற்புதமான தெளிவான பதிவு கிடைத்தது. மேலும் பெரிய அளவில் பார்க்க முடிந்தது. திரையிடலுக்கு தேவையானவை 1. அட்டை பெட்டி, 2. வெள்ளை பேப்பர், 3. ஸ்டார்ச் லைட்,4. மடிப்பு நுண்ணோக்கி, 5. மூன்று மேக்னட் பட்டன். செய்முறை அட்டையில் மேல் பகுதியில் நடு பக்கத்தில் ஒரு சிறிய துளையிட வேண்டும். அந்த துளையின் மேற் பகுதியில் ஒரு மேக்னட் பட்டனை ஒட்டிக்கொள்ள வேண்டும். அப்போது அந்த துளைவழிமட்டுமே வெளிச்சம் உட் புகும். அடுத்து நுண்ணோக்கியின் முன் பக்கம் நாம் பார்க்க நினைக்கும் சிலேடை வைத்து . பார்க்கும் பகுதியை போக்கஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அப்படியே பின்னால் திருப்பி மற்றொரு மேக்னட் பட்டனை மடிப்பு நுண்ணோக்கியில் பொருத்த வேண்டும். இப்போது நாம் போக்கஸ் செய்த பகுதி மாறாது நிற்கும். பின்னர். மடிப்பு நுண்ணோக்கியின் பின்பகுதி வெளியே தெரிய அட்டை பெட்டியில் ஒட்டப்பட்டுள்ள மேக்கனட் பட்டனுடன் இணைக்க வேண்டும். இப்போது மடிப்பு நுண்ணோக்கி கீழே விழாது. அட்டை பெட்டியுடன் பொருத்திக்கொள்ளும். பின்னர் நாம் நுண்ணோக்கியின் பின்பக்கம் இருந்து டார்ச் லைட்டால் வெளிச்சத்தை உள்ளே செலுத்தினால் சுவற்றில் நாம் போக்கஸ் செய்து வைத்திருக்கம் பகுதி தெளிவாக தெரியும். அதன் பகுதியில் ஒரு வெள்ளை தாளை பொருத்தி படம் வரையலாம். மேலும் அது என்ன வண்ணத்தில் உள்ளதோ அந்த வண்ணத்தை நாம் கொடுக்கலாம். பரிசோதனையாக எங்கள் குழு இன்று செய்து பார்த்தனர். பங்கேற்றோர். இனியன், நரேஷ், விஷால், பரத்பாபு, அனுசியா, அனுஜா இன்னும் பலர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!