கொரான வைரஸ் உலகையே முடக்கிவிட்டது. இந்தியாவையும் அவை விட்டுவைக்கவில்லை. ஊரடங்கில் முதல் வாரம் வீடு மற்றும் பள்ளியில் இருந்த சின்னச் சின்ன தேக்கமடைந்த வேலைகளை செய்து முடித்தோம். தொடர்ந்து கிடைத்த நேரத்தை மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தினோம். இது நேரத்தை அறிவியல்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் செலவு செய்ய பெரிதும் உதவியது என்றால் அது மிகையில்லை. என்னை மட்டுமல்ல குடும்பதில் உள்ள அனைவருக்கும் பயன்பட்டது. மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்ப்பதற்கான மாதிரிகளை எவ்வாறு சேகரிப்பது? வீட்டை விட்டு வெளியே செல்லாமல் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் யோசித்த போது மூன்று விஷயங்கள் கிடைத்தன. வீட்டில் உள்ள பயறு, பருப்பு, மாவு ஆகியவற்றில் காணப்படும் வண்டுகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை பதிவு செய்வது வீட்டில் சமயலுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்டகள் மற்றும் காய்கறிகளின் கழிவுகப் பாகங்களை பதிவு செய்தல் வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடிகள் மற்றும் சிற்றுயிர்கள் ஆகியவற்றை பதிவு செய்தல். என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் எங்களது செயல் திட்டத்தை கிடைத்த நேரத்தில் செயல்படத்தினோம். இம் மூன்று செயல்திட்டத்தையும் அன்றட வேலைகளை செய்து முடித்தப்பிறகு கிடைக்கும் நேரத்தில் மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் பதிவு செய்தோம்.. நேரம் போனதே தெரியாமல் வேலை செய்தோம். அதே நேரத்தில் எங்களுக்கு தெரியாமலேயே சில திறன்கள் வளர்ந்து வந்ததையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக உற்று நோக்கி அறிதல் ஒப்பீடு செய்து பார்த்தல் புதிய வழிமுறைகளை கண்டறிதல் வீட்டில் முருங்கை, கொய்யா, மருதாணி, சீத்தாப்பழம் போன்ற மரங்களும், பல வகையான காட்டுச் செடிகளும் இருக்கின்றன. அவற்றின் இலைகளை பதிவு செய்தபோது சில இலைகளின் மேலும், சில இலைகளின் கீழும் பல வகையான பூச்சிகள் வசிப்பதும், முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதையும் பார்க்க முடிந்தது. பெயர் தெரியாத வண்டுகள், எறும்புகள், சிலந்திகள் போன்றவற்றை எங்களால் பார்க்கவும், பதிவு செய்யவும் முடிந்தது. மேலும் சில வண்டுகளின் முட்டைகளையும், அதன் உட்கரு இயக்கங்களையும் நாங்கள் பார்க்கவும், பதிவு செய்யவும் செய்தோம். அதே வேளையில் பலவகையான ஒப்பீடுகளையும் செய்து பார்க்க முடிந்தது. குறிப்பாக இலைகளின் வடிவங்கள் இலைகளின் சுனைகள் இலைகளின் உள் வடிவங்கள் இலைகளின் இலைதுளைகள் பூக்களின் இதழ்களின் வடிவங்கள் இதழ்களின் உள் வடிவங்கள் இவற்றின் வண்ணங்கள் ஆகியவற்றின் வடிவங்களையும், அமைப்புகளையும் ஒப்பீட்டு பார்க்க முடிந்தது. இது பார்ப்பதற்கு அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. மேலும் மடிப்பு நுண்ணோக்கியையும், மாதிரிகளையும் பல வகையில் பதிவு செய்தவற்கான புதிய வழிமுறைகளை கண்டறிந்து பதிவு செய்வதற்கு இக்காலக்கட்டம் பெரிதும் உதவியுள்ளது. குறிப்பாக நுண்ணோக்கி வழி செலுத்தப்படும் ஒளியின் அளவு வேறுபட வேறுபட எவ்வாறு மாதிரிகள் கண்ணுக்கப் புலப்படுகின்றன? அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே வகையான வெளிச்சத்தில் மடிப்பு நுண்ணோக்கியின் கோணத்தை மாற்றி மாற்றி வைக்கும் போது எவ்வாறு மாதிரிகள் புலப்படுகின்றன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அதன் மாற்றங்கள் சுவாரசியமாக இருக்கும். நுட்பமான, தெளிவான படங்களை எடுப்பதற்கான யுதிகளையும் இக்கால கட்டத்தில் அறிந்து கொள்ள முடிந்தது. இன்னும் இது போன்ற பலவகையான யுத்திகளையும் நாம் இக்கால கட்டத்தில் கண்டறியலாம். கண்டறியப்பட்ட படங்களை கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுக்களையும் உருவாக்க முடியும். இந்த அறிவியல் விளையாட்டுகள் குழந்தைகளுக்க அறிவியலின் மீது பெரிதும் ஆர்வத்தை தூண்டும். இந்த வகையில் வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடிகளின் மேலும் பல தாவரங்களையும் அறிந்து பட்டியல் தயாரிக்கலாம். கண்ணில் படும் பூச்சிகள், வண்டுகள், ஆகியவற்றின் பாகங்களை நாம் மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் பதிவு செய்யலாம். அவற்றினை தொகுத்து ஒரு ஆல்பம் தயாரிக்கலாம். குழந்தைகள் தாங்கள் மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கும் அமைப்பினை பார்த்து படம் வரையலாம். அதனை தொகுக்கலாம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் ஒரு புதிய உலகிற்கு மடிப்பு நுண்ணோக்கி அழைத்துச் செல்லும் . வாருங்கள் மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் நுண் உலகின் புதிய அழகினை காணலாம்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!