தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 52 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும், அக்கிராமங்களில் பணி செய்கிற ஆசிரியர்களும் பங்கேற்றது மற்றொரு சிறப்பு. மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன்படுத்த முடியும். மலை கிராமங்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் எனக்கு இருப்பதை உணர முடிந்தது. இது வரை இது போன்ற அறிவியல் உபகரணங்களை அம்மாணவர்கள் தொட்டறிந்தது கூட கிடையாது. அதை தொட்டுப் பார்ப்பதே அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் பல் வேறு நுண்ணிய பொருட்களை பார்க்கும் போதுஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றனர்.வாய்ப்பு கிடைத்தால் மலை கிராமங்களுக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டும். காரணம் நிறைய இருந்தாலும் ஒரு உதாரணம். அந்த பயிற்சி முகாமில் நான் ஈயின் கூட்டுக்கண்களை பார்க முடியும் என்றேன். சில வினாடிலில் ஒரு மாணவன் கையில் ஒரு ஈயுடன் வந்துவிட்டான். ஈயை பிடிப்பதை அவ்வளவு எளிதாக அவர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருக்கிறது. அறிவியலின் பால் அந்த ஆர்வத்தை இட்டுச்செல்ல இந்த மடிப்பு நுண்ணோக்கி பெரிதும் பயன்படும் என்பது மிகையில்லை. ஈயின் கூட்டு கண்களை இதற்கு முன் பார்த்திருந்தாலும் இது ஒரு அற்புதமான பதிவாக இருந்தது. பதிவுகளை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் நான் கற்றுக்கொடுத்தேன். ஈயின் முகம், மற்றும கால்கள் போன்ற பாகங்களை அவர்களே பதிவு செய்தனர். ஈயின் இறக்கையை இதற்கு முன் இந்த வடிவத்தில் நான் பார்த்ததும் இல்லை பதிவு செய்ததும் இல்லை. அற்புதமான பதிவு.
முகத்தின் முன்பக்கம் உள்ள உருஞ்சும் பகுதி
முகம்
கால் பகுதிகள்
இறகு கூட்டுக்கண்கள்
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!