பெருங்காமநல்லூர் ஊர் திருவிழாவில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி நடத்துவதற்கான முன் தயாரிப்பில் ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அடுத்த ஆண்டு1920 மதுரையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குக்கிராமம் தான் இந்த பெருங்காம நல்லூர் . இங்கே இருந்த சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்காக போடப்பட்ட சட்டத்தை எதிர்த்து போராடிய மக்களைபிரிட்டீஸ் அரசாங்கம் துப்பாக்கியால் கொன்று குவித்த இடம். அன்று உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நமது மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் குறித்தும் பதிவுகள் குறித்தும் விளக்குவதற்காக கண்காட்சியை நமது ஈடன் கல்வியியல் கருத்துக் கூட மாணவர்கள் செய்தார்கள். இதற்காக முதல் நாளே எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து சிலேட் தயாரிப்பு நடந்தது. இந்த தயாரிப்பில் முகுந்தன், பிரகாஷ், அபிமணிகண்டன், பிரவீன் இனியன், முதின்ஸ், சிவலட்சுமி ஆகியோர் தயாரித்தனர். அதில் ஈயின் இறக்கை, எறும்பின் கால், புங்கை மரத்தின் மகரந்தம் ஆகியவற்றை தயாரித்து வைத்துக் கொண்டனர். அந்த பதிவுகள் உங்கள் பார்வைக்கு. அந்த சிலேடுகளை பார்த்து மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!