இனியன் சில நாட்களுக்கு முன் மடிப்பு நுண்ணோக்கியை கொண்டு பதிவு செய்யும் போது இரண்டு பேர் தேவைப்படுகிறது. சில சமயங்களில் தனியாக செய்யும் போதும் கூட சிரமமாக இருக்கிறது. மேலும் குணிந்து பார்க்கும் போது போகஸ் பண்ணுவதற்கும், படத்தை பதிவு செய்வதற்கும் யாரேனும் ஒருவர் மொபைலை பிடித்துக்கொள்ள வேண்டி வருகிறது. எனவே அதற்கு ஒரு ஸ்டான்ட் செய்தால் என்ன என்று கேட்டான். செய்யலாம் என்றேன். அவனும் அவருடை தாத்தாவும் இணைந்து ஒரு டிசைன் செய்து ஒரு ஸ்டான் செய்துவிட்டார்கள் அது அரை அடி உயரத்தில் உள்ளது. மேல் பகுதியில் ஒரு சிறு கட்டை உள்ளது. அந்த கட்டை முன்னும் பின்னும் நகற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மொபைலின் நீளம், அகலம் சார்ந்து பொருத்திக் கொள்ளலாம். அதனை கொண்டு எளிமையாக போகஸ் செய்து கொள்ள முடிகிறது. பதிவு செய்து கொள்ள முடிகிறது. இனியன் தேவையை விளக்கி எப்படி இருக்கலாம் என்று சொன்னான். அவங்க தாத்தா ராஜூ வீட்டில் கிடந்து உபயோகமற்ற கட்டையில் செய்து கொடுத்தார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்களும் முயற்சிக்கலாம்
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!