மதுரை இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி முகாம் இன்று 12.08.2018 மதுரை திருப்பரங்குன்றத்துப் பூங்காவில் நடைபெற்றது. இதில் 18 பேர் பங்கேற்றனர். அற்புதமான ஈடுபாட்டோடு இளைஞர்கள் பங்கேற்றனர். இனியன் மற்றும் நானும் இந்த பயிற்சிமுகாமில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தோம். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. ஆனால் பயிற்சிக்கான காலம் ஒரு நாள் என்பது போதுமானதாக இல்லை என்பதையே இத்தனை பயிற்சியின் அனுபவத்தில் கிடைத்திருக்கிறது. மாதிரிகள் நிறைய இருக்கும் இடத்தில் பயிற்சி நடைபெறுவது இன்னும் சிறப்பாக இருக்கும். பொதுவாக இறுதில் மடிப்பு நுண்ணோக்கியை microcosmos.foldscope.com பகுதியில் பதிவு செய்வதற்கான வழிகாட்டலை கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!